
கண்டி மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் 150,000 ரூபாவை இலஞ்சமாகப்பெற முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (05) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.
$ads={2}
கண்டி - கட்டுகஸ்தோட்டை பாலத்துக்கு அருகாமையில் டிஜிட்டல் பதாகை ஒன்றை நிறுவுவதற்காக கண்டி மாநகர சபையினால் முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்கும் பொருட்டு மாநகர சபை உறுப்பினர்கள் குறித்த திட்டத்தை முன்னெடுப்பவரிடம் இலஞ்சம் கோரியுள்ளனர். இது தொடர்பில் குறித்த நபர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளித்துள்ளார். இதனையடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-எம்.எப்.எம்.பஸீர்