![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjnMuI0kEliNOB20xAi7rlVBHshdoklrUpGE_cfi61NRRRZX537vQs8k-Nto_GnuohpsHkKbDi9HQWyvE5DqSxniPvjQXRgahwOIAGS3ZTGnJqxhXtLp94xIJIaWnSo4yo9Snklih8oEk/s16000/Rishad-2020.04.15_1.jpg)
நாடாளுமன்றில் நேற்றைய தினம் (20) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியசாலைக்கு சென்று மரணிக்க நேரிட்டால் உடல்கள் தகனம் செய்யப்படும் என்ற அச்சத்தினால் முஸ்லிம்கள் வைத்தியசாலைக்கு செல்ல விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடல்களை தகனம் செய்வது புனித குர்ஆனில் தடை செய்யப்படவில்லை என பொய்யான தகவல்களை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
புனித குர்ஆனை நேர்மையான முறையில் வாசித்து அறிந்து கொண்டால் உண்மைகளை புரிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை சிசுவொன்று தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.