ஹொரவ்பொத்தான, திம்பிரியத்தாவள முஸ்லிம் வித்தியாலயத்தில் 6 மில்லியன் பெறுமதியான ஒரு மாடி வகுப்பறை கட்டிடம் நேற்று (16) பாடசாலையின் அதிபர் ஜனாப் எம்.கே ஜப்பார் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் ஊடக குவைட் நாட்டைச் சேர்ந்த சபிய்யா அல் அஹம்மத் என்பவரின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினரின் அன்பளிப்பின் மூலம் நான்கு வகுப்பறைகள் கொண்டு இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளன.
$ads={2}
இந் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன், முன்னால் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.ஹுஸைன், பீ.சஹீது, அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ.நூறுல்லாஹ் (நளீமி) சமூக சேவையாளர்களான தேசமானி, தேசகீர்த்தி ஏ.ஏ.எம்.சியாம் ஹாஜியார், தேசமானி ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியார் ஹொரவ்பொத்தான பிரதேச சபை, உறுப்பினர் என்.எம்.பாசில், அல் ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் வடமத்திய மாகாண இணைப்பாளர் ஏ.எம்.உவைஸ், வடமாகாண இணைப்பாளர் எஸ்.எம்.ஜாபீர் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவர்களோடு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
-முஹம்மட் ஹாசில்