திருடிய குற்றச்சாட்டில் கைதான நபரொருவர் தனது சிறுநீரகங்களில் ஒன்றை விற்று அந்த பணத்தை ஹெராயின் போதைப் பொருள் வாங்க பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வழங்கிய வாக்குமூலத்திலேயே இந்த விடயம் வெளியானது.
$ads={2}
துணிகளைத் திருடியதாக மஹரகமவின் பமுனுவ பகுதியில் ஆடை விற்பனையாளர்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து அவர் கடந்த திங்கள் அன்று கைது செய்யப்பட்டார்.
36 வயதுடைய குறிப்பிட்ட நபர் தனது சிறுநீரகத்தை விற்று ரூ .2 மில்லியனைப் பெற்றதாகவும், ஆனால் ஹெராயின் கொள்வனவு செய்து பணம் அனைத்தையும் இழந்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
அவர் அவ்வப்போது பமுனுவ பகுதியிலிருந்து சுமார் இதுவரை ரூ .1.5 மில்லியன் மதிப்புள்ள துணிகளை திருடி புறக்கோட்டையில் உள்ள வணிகர்களுக்கு விற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட துணிகளை விற்பதன் மூலம் பெற்ற பணத்தையும் ஹெராயின் வாங்கவே பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார் அந்த திருடன்.