நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு இன்றைய தினம் (19) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன் ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இதனடிப்படையில், இந்த வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளமையினால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாதுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.
பேராசிரியர் சரத் விஜேசூரிய மற்றும் காமினி வியன்கொட ஆகியோரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.