கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற நபர்களை அடக்கம் செய்வதின் ஊடாக, தொற்று பரவுவதற்கான விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் எதுவும் கிடையாது என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவிக்கின்றார்.
இன்று (10) காலை எதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வழங்கிய செவ்வியின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
$ads={2}
இதேவேளை, இலங்கையில் உரிய முறையில் ஆராய்வுகளை மேற்கொள்ளாத நிலையிலேயே, சடலங்களை தகனம் செய்யவது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க சுட்டிக்காட்டினார்.