மினுவாங்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
$ads={2}
இதன்பிரகாரம், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லொழுவை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரக்காமுறை, மீதெனிய மற்றும் தெஹிபிட்டிய ஆகிய கிராம சேவகர் பிரிவுளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-ஐ. ஏ. காதிர் கான்