
சகல சமய நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள கொரோனா நிலைமையின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சகல வழிகாட்டல்களையும் பின்பற்றி 50 பேர் வரையறுத்து பங்குகொள்ள முடியும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
$ads={2}
இதற்கான அனுமதி வழங்குவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சின் சமய விவகாரங்களுக்கான மேலதிக செயலாளரால் கையெழுத்திடப்பட்டுள்ள கடிதம் ஒன்று முஸ்லிம் சமய, கலாச்சார மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
குறித்த தளர்வு எந்த ஒரு பள்ளியிலும், ஐவேளை தொழுகை மற்றும் ஜூம்ஆத் தொழுகை உட்பட அனைத்து தொழுகைக்கும் செல்லுபடியாகும்.
மேலும், குறித்த தளர்வு தனிமைப்படுத்தலில் இருக்கும் பகுதிகளுக்கு மீள் அறிவித்தல் வரை செல்லுபடியாகாது.
அதன் பிரதியை கீழே காணலாம்.
