சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரிடம் நேற்று (22) மாலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே அவருக்கு மேற்படி தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு அன்டிஜன் பரிசோதனைக்கு மேலதிகமாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்றுள்ளமை கடந்த சில நாள்களாகக் கண்டறியப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்றுள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.