பேராதெனிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தி, அவர்களைச் சிறைப்படுத்தி வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தம்மிக பாணி தயாரித்த ஆயுர்வேத வைத்தியர் என கூறப்படும் தம்மிக பண்டாரவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
$ads={2}
கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பல் வைத்தியர் தரப்பினரதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தரப்பின் சிலரதும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ள கேகாலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேலதிக குற்றவியல் விசாரணைகளை தொடர்வதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.