ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜெயசேகர ஆகியோர், தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை பகிரங்கப்படுத்தியமைக்காக பாராட்டப்பட்டுள்ளனர்.
பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளன செயலாளர் மஹேந்திர பாலசூரிய இந்தப் பாராட்டை தெரிவித்துள்ளார்.
ஜெயசேகர மற்றும் ஹக்கீம் ஆகியோர், தாம் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை தொடர்பில் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிரங்கப்படுத்தினர்.
அத்துடன் தம்முடன் தொடர்புக்கொண்டவர்களையும் சுயதனிமைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
எனினும் ஏனைய பலர் தாம் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பின்னர் அதனை மறைக்கும் முகமாக எவருக்கும் தெரியாமல், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றதாக மஹேந்திரபாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் முன்மாதிரியான திட்டங்களை மேற்கொண்டால் பொதுமக்களும் அதனை பின்பற்றுவார்கள்.இதன்மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் பாலசூரிய தெரிவித்துள்ளார்.