![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQyWftZuXqqj24bxvH8mQDPTiWzMVjSDETm4kJVWoWu5b4HdrvSpiOOG-QK1B_hy9cZYdlQZsqU7zTQRP5VVb6aCtqfJF1qK9wErznPM43J2d4ysTFKA56v4D_9gBbZIKS76OYWHx9mvs/s16000/625.0.560.320.160.600.053.800.700.160.90.png)
லண்டனில்இலங்கை தூதரகத்திற்கு முன்பாக 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களைப் பார்த்து 'கழுத்தை அறுப்பேன்' என்று பொருள்பட சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு நேற்று (18) மற்றொரு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
$ads={2}
லண்டனிலும் இராஜதந்திர வட்டாரங்களிலும் மிகுந்த சர்ச்சைக்குள்ளான பிரியங்க பெர்ணாட்டோவை இலங்கைக்கு வரவழைத்தஇலங்கை இராணுவத் தலைமை, அவரை இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக (General Officer Commanding, 58 Division) மேஜர் ஜெனரல் தர பதவி நிலைக்கு உயர்த்தியிருந்தது.
பிரித்தானிய நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட அவருக்கு தற்பொழுது மற்றுமொரு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர் பதவி நிலையான 'Director General General Staff' பதவி வழங்கப்பட்டுள்ளது.