நாட்டின் தெற்கு மற்றும் வடக்கின் ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் என்ற காரணத்தினாலே யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அகற்றப்பட்டது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
இந்த முடிவை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எடுத்ததாக அவர் கூறினார்.
போரின் 10 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நினைவுச் சின்னம் அகற்றப்பட்டது என பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். ஸ்ரீ சத்குனராஜா 'தி இந்து' ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
“அப்போதிருந்து (2019), அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பை அகற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். உயர் அதிகாரிகளிடமிருந்து எனக்கு பல அறிவுறுத்தல்கள் கிடைத்தன, பல்கலைக்கழக மூலதனப் பணிகள், பொறியியல் மற்றும் பராமரிப்புத் துறைகளுடனான பல கூட்டங்களில் இதைப் பற்றி விவாதித்தோம், ”என்று பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். ஸ்ரீ சத்குனராஜா கூறினார்.