![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixKw1N-VmX6PP-gSaCyj8yMe9ER_mXpSM7kgkqO8DelCn67E7mTgWJyv3yQXCMeQEq6r37zfbQt7hG3v3BCBn63qShlxQSDMgD9u3Oi_DrcW1XK4h8PHgVkJ1lxmsjOImokbRLXjr8Ua8/s16000/8BEDC5EA-F477-433B-AF6A-1DA083B63C88.jpeg)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகள் கடந்த பல வருடங்காள தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று மீண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சட்டத்தரணிகள், குறித்த வழக்கினை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
$ads={2}
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதியன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை குற்றச்சாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது