
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெற்காசியாவிலேயே மிகப்பெரும் சட்டவிரோத போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
135 மில்லியன் ரூபா பெறுமதியான 9 கிலோ நிறை கொண்ட 18,000 மாத்திரைகள் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டன.
$ads={2}
இந்த மாத்திரைப் பொதிகள் கொழும்பு 5 இல் உள்ள முகவரிக்கு பெல்ஜியம் நாட்டிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தால் பெறப்பட்ட பல பொதிகள் குறித்து இலங்கைச் சுங்கத்திணைக்களம் நடத்திய விசாரணையில் இந்தப் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணையில் 8 புகையிலைப் பொதிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.