தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை நாட்டினுள் உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியிருக்கிறார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அவர் அதில் கூறியிருப்பதாவது,
"தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது போல் தெரிகிறது.
பெரும்பான்மை மதவெறிக்கு அடிபணிந்து, உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குத் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இலங்கை பரிதாபத்துக்குரியதாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.