![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghKN84kbH7lpvyrLMeG7cz3ru3sHAyrvp-vG8GEHNGsKVYPT6EM9QEdKKyQb3_BdMOWvqR7YElV_ZnTayxUXX7Fi5bAll3naP6a7GRQc5e851c8gWqAg2wWchODbv8chyphenhyphenPE1MX1H9kLsA/s16000/father+hanged+to+death.jpg)
மகளை தாக்கிய குற்ற உணர்வு தாங்காது தந்தையொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின் போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையொருவர் தாக்கியதையடுத்து படுகாயமடைந்த மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (17) மதியம் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
$ads={2}
அம்பாறை - திருக்கோவில் இரண்டாம் பிரிவு நல்லையா வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்கம் சுகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே சம்பவ தினமான நேற்று பகல் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது தாயாரை தந்தை தாக்க முற்பட்டபோது மகள் குறுக்கே சென்ற நிலையில் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அவர் காயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மனைவி வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது மகளை தாக்கிய குற்ற உணர்வினை தாங்க முடியாமல் வீட்டின் அறையின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.