
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தெரிவித்துவரும் கேகாலையை சேர்ந்த தம்மிக பண்டார எனும் ஆயுர்வேத வைத்தியர் தங்களைத் தாக்கியதாக ஒரு வைத்தியர் உட்பட குழு ஒன்று கண்டி - பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக சமூக வலைதள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
$ads={2}
தம்மிக பண்டாரவை அவரது வீட்டில் சந்திக்க வந்த வைத்தியரை அவரை திட்டிய பின்னர் அவரையும் அவருடன் வந்த குழுவையும் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை குறித்த வைத்தியர் தனது மொபைல் போனில் பதிவு செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும் தம்மிக்கவின் வீட்டில் இருந்த சிலர் அந்த வீடியோவை நீக்கிய பின்னர், அவர்களை வீட்டில் பூட்டி வைத்ததாக குறித்த புகாரில் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பேராதெனிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.