![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzbGXK_8p3vSJTEb9GBtlJyb5q565VfUaMh_8y1zfcmTK8DH_VIBSE2ue4j-_lVf3W5NwXdbmnHm8I3rA7LV6e06lwv6PkOBieECqWZFkcak4AHhrh8CsoZmKHGuGEqolPptWKT6o76IY/s16000/Rajitha-Senaratne.jpg)
முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (18) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முகத்துவாரம் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு விலை மனு கோரப்பட்டமை குறித்து இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
இலஞ்ச ஊழல் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டமையின் மூலம் அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாக குறித்த மூவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.