தனது மேசையிலிருந்த சிகப்பு பட்டனை நீக்கிய பைடன்! வெளியான சுவாரஸ்யமான சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது மேசையிலிருந்த சிகப்பு பட்டனை நீக்கிய பைடன்! வெளியான சுவாரஸ்யமான சம்பவம்!


டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக மேஜையில் ஒரு சிகப்பு பட்டனை பொருத்தியிருந்தார். பார்வையாளர்களிடம் அது அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்யும் பட்டன் என்று கூறி பீதியை கிளப்புவார். அதனை தற்போது பைடன் நீக்கியுள்ளார்.


அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த புதனன்று பதவிவேற்றார். டிரம்ப் செயல்படுத்தி வந்த பல்வேறு திட்டங்களை இவர் கைவிட்டு வருகிறார். அதில் ஒரு சுவாரஷ்யமான விஷயத்தை அமெரிக்க ஊடகவியலாளர் டாம் நியூட்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி அமரும் பிரம்மாண்டமான ரெசல்யூட் மேஜை உள்ளது. பாரம்பரியமான அந்த மேஜையில் டிரம்ப் ஒரு சிறிய சிகப்பு பட்டனை பொருத்தியிருந்தார். அதனையே தற்போது ஜனாதிபதி பைடன் நீக்கி உள்ளதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.


அது டயட் கோக் பெறுவதற்கான பட்டன் என்று அவர் தெரிவித்துள்ளார். டைம்ஸ் ரேடியோவில் தலைமை அரசியல் விமர்சகராக இருக்கும் டாம் நியூட்டனும், சன்டே டைம்ஸில் அரசியல் பிரிவு ஆசிரியராக இருக்கும் டிம் ஷிப்மேன் என்பவரும் 2019-ல் டிரம்பை பேட்டி எடுக்கச் சென்ற போது அந்த சிறிய சிகப்பு நிற பட்டனை ஆச்சரியமாக பார்த்துள்ளனர். அப்போது டிரம்ப் அந்த பட்டனை அழுத்தியுள்ளார். உடனே பணியாள் ஒருவர் வெள்ளி தட்டில் டயட் கோக் கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் ஒரு சோடா பிரியர் ஆவார். தினசரி 12 கேன் டயட் கோக் அருந்துவார் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


க்ளிஃப் சிம்ஸ் என்ற வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர், 'டீம் ஆப் வைப்பர்ஸ்' என்ற சுயசரிதை எழுதியுள்ளார். அதில், இந்த சிகப்பு பட்டனை வைத்து தன்னை பார்க்க வருபவர்களை எப்படி எல்லாம் டிரம்ப் ஏமாற்றுவார் என்று விவரித்துள்ளார்.


“இது அணு ஆயுதங்களை இயக்கச் செய்யும் பட்டன் என்று அவர்களிடம் கூறிவிட்டு உடனே அழுத்திவிடுவார். வந்திருக்கும் விருந்தினர்கள் மிரட்சியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பார்கள். அப்போது ஒரு பணியாள் வெள்ளித்தட்டில் டயட் கோக் நிரப்பிய கண்ணாடி கோப்பையை கொண்டு வருவார். டிரம்ப் வெடித்துச் சிரிப்பார்.” என குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.