இலங்கை தடயவியல் நோயியல் வல்லுநர்கள் கல்லூரி, நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, சுயாதீன இறப்பு முகாமைத்துவப் பணியில் தேவையற்ற முறையில் தலையிடுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை தடயவியல் நோயியல் வல்லுநர்கள் கல்லூரியின் தலைவர் வைத்திய கலாநிதி அசெல மெண்டிஸ் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
$ads={2}
சுயாதீன மரண முகாமைத்துவ செயல்முறை சட்ட மருத்துவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கொரோனாவினால் உயிரிழந்தோரின் உடலங்களை அப்புறப்படுத்துவது தொடர்பில் தொழில்நுட்பக் குழுவின் தலைவரை அச்சுறுத்தும் வகையில் வெளிப்பட்ட கருத்தையே தாம் கண்டிப்பதாக இலங்கை தடயவியல் நோயியல் வல்லுநர்கள் கல்லூரி தெரிவித்துள்ளது.