அரசியல் பழிவாங்கல் என்பதற்கு அப்பால் இது இனச் சுத்திகரிப்பின் ஆரம்பமாகும்! -சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசியல் பழிவாங்கல் என்பதற்கு அப்பால் இது இனச் சுத்திகரிப்பின் ஆரம்பமாகும்! -சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில்


ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற விடயத்தை அரசியல் பழிவாங்கல் என்பதற்கப்பால் இனச் சுத்திகரிப்பின் ஆரம்பமாகவே கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் 1983ற்கு முன்னரும் இவ்வாறே ஆரம்பமானது. இதற்கு ஒரு துரும்பாக கொரோனா பயன்படுத்தப்படுகிறது. இது சதுரங்க ஆட்டத்தின் ஆரம்பம். முஸ்லிம்களுக்கு நாட்டுப் பற்றுமில்லை - பங்குமில்லை என அநாகரிக தர்மபால கூறியதை சஹ்ரானின் அகோர அக்கிரம ஈனச் செயல் எதிர்பார்த்திருந்த இனவாதிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கிற்று. 


$ads={2}


தேசிய நூதனசாலை, மும்தாஜ் மஹால், கனத்தை மயானம் போன்ற சொத்துக்களை நாட்டுக்காக அன்பளிப்பு செய்தவையெல்லாம் சஹ்ரானின் ஈனச் செயலால் மறைக்கப்பட்டு விட்டதால் கபன்துணி வெண்துணி கவனயீர்ப்புக்கள் நடத்துகின்றோம் என மாற்றத்துக்கான முன்னணியின் பிரதம செயட்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேலும் அந்த அறிக்கையில், 


அதேநேரம் முஸ்லிம் சமூகம் மண்டியிட்டு சரணடையாது என்ற செய்தி உரத்துச் சொல்லப்பட்டிருந்தாலும், முஸ்லிம் தலைவர்களின் தலைக்கணம் அறிக்கைகளால் தலைவிரித்தாடுகின்றது. இவை இவ்வாறிருக்க உலக முஸ்லிம் அமைப்புகள் மற்றும் உலகம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் செய்தும் இனச்சுத்திகரிப்பாளர்கள் கொஞ்சம் கூட அசையவில்லை என்பது வியப்புக்குரியது.


தேசப்பற்று, நல்லிணக்கம், இன ஒற்றுமை,சகவாழ்வு,விட்டுக்கொடுப்பு என்ற தத்துவார்த்த கோட்பாடுகளின் வரையறைக்குள் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்படாத வரை எந்தப் போராட்டமும் தீர்வை பெற்றுத்தர வெற்றியளிக்கப்போவதில்லை.


இனச்சுத்திகரிப்புக்குள்ளாகும் தேசியத்துக்கும் இனக்குழுமங்களுக்கும் தமது சுய நிர்ணய உரிமையை பாதுகாப்ப தற்கான சர்வதேச வழிமுறைகள் இருக்கிறது என்பதனாலேயே தமிழர்களுடைய பிரச்சினை சர்வதேசமயப்பட்டது.


எனவே சகல முஸ்லிம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமைத்துவ ஆசைகளுக்கப்பால் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க உலக நாடுகளின் தூதுவர்களுக்கு விளங்கப்படுத்தப்படுவதுடன் இனவாத ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு அனுபவித்து வந்த உரிமைகளை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


-நூருல் ஹுதா உமர்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.