![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKAvcdlZw4iuQ9odiTCjWzIU7mn5Ew8zq6Sk7NXjzbrFxy5tsGW00aonEqpO0VMLsHrqGZTMva4Uh748wuBBF4u134hDqveA__PPzudkilqr_094v4lpEOHuAr0WQShk-dAfjV66Op9Bs/s16000/178880ca-d0d80980-rain-522_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg)
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் எனவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.