எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி முதல் இலங்கையில் விமான நிலையங்களின் வணிக நடவடிக்கைகளை துவங்க உத்தியேசித்துள்ள நிலையில், இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
$ads={2}
சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், BIA மற்றும் MRIA ஆகியவற்றில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான மூன்று முக்கிய வழிகாட்டுதல்களை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் கொரோனா தடுப்பு பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு ஏற்ப அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
1. இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் மீளழைத்துவரும் விமானங்களின் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையின் கட்டுப்பாடு இருக்காது. (முன்னதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன)
2. கட்டணம் செலுத்தும் தனிமைப்படுத்தல் முறையில் இலங்கைக்கு மீள் அழைத்துவரப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 750 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. (மேலும் ஒரு விமானத்தில் கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தல் முறையில் அழைத்துவரப்படும் நபர்கள் 75 ஆகவும் மீதம் உள்ள ஆசனங்களை சுற்றுலா பயணிகள் நிரப்ப முடியும்.)
3. இலங்கைக்கு அழைத்துவரப்படும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 2,500 பேரை மிஞ்சாமல் இருத்தல் வேண்டும்.
-எம்.எம்.எம். அஹ்மத்