வடமத்திய மாகாணத்தில் இயங்கி வரும் அவந்தி தேவி சிறுவர் பராமரிப்பு நிலையத்திலுள்ள அனைத்து ஊழியர்களும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்கள் பலரும் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாகவும், பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகவும் சிறுவர் விவகார அமைச்சிற்கு முறையிடப்பட்டிருக்கின்றது.
இந்த முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக தற்போது குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
சுயாதீன விசாரணைக்காக அவந்தி தேவி பராமரிப்பு நிலையத்திலுள்ள அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம் - ஐ.பி.சி