உலக நாடுகள் பாரிய தொழில்நுட்பத்திலும், புதிய கண்டுபிடிப்புக்களாலும் மமதை கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு உலகெங்கிலும் கண்ணுக்கும் தெரியாத கோவிட்19 வைரஸ் காரணமாக விஞ்ஞானம் பொய்யாகி பல மில்லியன் கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், மேலும் பல பில்லியன் கணக்கானோர் நோய்வாய்ப்பட்டு வேலைகள், வருமானங்கள் மற்றும் அவர்களின் உடமைகளை இழந்திருக்கிறார்கள்.
மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தம் முழு உலகத்தையும் ஆட்டிப்படைக்கிறது. எமது நாட்டிலும் 1990ஆம் ஆண்டுகளில் நாம் கண்டுவந்தது போலவே, நம் நாட்டில் பல உயிர், பொருள் சேதங்களை இழந்த 33 வருட பயங்கரவாத யுத்தம் நிறைவுபெற்றும், இப்போதும் மக்கள் ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகளைக் கூட விட்டுக்கொடுக்காமல் வஞ்சகர்களும், இனவாதிகளும், துரோகிகளும் நிரம்பி வழிகிறார்கள்.
நாங்கள் எதிர்பார்க்காத மாற்றங்கள் எம்மைச்சூழ நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் எதிர்பார்த்த மாற்றம் இன்னமும் நடைபெறவில்லை. ரோபோ ஓட்டுனருடன் கார்கள் இல்லை என்றாலும், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது.
தொழில்நுட்பம், தகவல்தொடர்புகள் முன்னேறி முன்பை விட மக்கள் நெருக்கமாகியுள்ளனர். இன்று மனித வரலாற்றில் முன்னெப்போதையும் விட மக்கள் பல வசதிகளை கூடுதலாக அனுபவிக்கிறார்கள்.
ஆனாலும் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு எத்தனை பேரை நெருங்கி வந்தாலும், அந்த நெருக்கத்தில் கூட நாம் இன்னும் தனிமைப்படுத்தப்படுகிறோம்.
பொதுவாக, இந்தக் காலத்தில் வேறு எப்போதையும் விட அதிகமான பொருள் வசதிகளும் ஆடம்பரமும் உள்ளது, ஆனால் அவற்றினால் மக்களின் மனதில் மகிழ்ச்சியை கொண்டுவரவோ அல்லது மன அழுத்தத்தைப்போக்கவோ முடியவில்லை.
எனவே நாம் எமக்கு கிடைத்திருக்கும் விடயங்களுக்கு எம்மைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துவோம் மேலும் எமக்கு கிடைக்கவேண்டியிருந்தும் தட்டிப்பறிக்கப்படும் உரிமைகளுக்காக நாம் எல்லோரும் ஒரு சமூகமாக ஒன்றுபட்டு பாடுபடுவோம் இதுவே எமக்கு நல்ல முடிவுகளை எதிர்காலத்தில் கொண்டுவரும்.
ஹிதாயத் சத்தார்
முன்னாள் உறுப்பினர்
மத்திய மாகாண சபை