நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஆலயடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண், கொழும்பு 14 ஐ சேர்ந்த 91 வயது பெண், அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண் மற்றும் தர்கா நகரைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
$ads={2}
இந்நிலையில், இலங்கையில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்தோடு இன்று 555 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 826 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwWCxpON_HQDxjkfshycjKSlzNFyas20bG2d9PG2WE-SpQ6uRv_v8wJK1oT2tPovpUpxH3hIE2zTdQlBPdkkXokorsY82Hz7Gi1aw7Xy7oN_33cWSKxS6Tz6PLhBtGSjRXloEZ9UH1ML8/s16000/covid19.jpg)