சிட்னி டெஸ்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பும்ரா, சிராஜை இன ரீதியாக இழிவுபடுத்திய ரசிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள்களில் சிட்னி மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, சிராஜ் ஆகிய இருவரையும் இன ரீதியாக ரசிகர்கள் சிலர் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

$ads={2}

இதையடுத்து 3-ம் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்திய அணி கேப்டன் ரஹானே, அஸ்வின் ஆகிய இருவரும் கள நடுவர்கள் பால் ரீஃபில், பால் வில்சன் ஆகியோரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்கள். மைதானத்தின் பாதுகாவல் அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய வீரர்களை இழிவுபடுத்திய ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.