அலுத்கம, பயாகல மற்றும் பேருவலை பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பி.சி.ஆர் பரிசோதனைகளில் 75 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக பேருவலை பிரதேச செயலாளர் சதுர மல்ராஜ் இன்று (11) தெரிவித்துள்ளார்.
$ads={2}
கடந்த 24 மணித்தியாலத்தில், நேற்று (10 ) 2703 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துரித எண்டிஜன் பரிசோதனைகளில் இருந்தே இவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் நேற்று (11) தர்கா நகரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும், மேலும் 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. (யாழ் நியூஸ்)