26/12/2020 ஆம் திகதி பல ஊடகங்களில் அறிவிக்கப்பட்டு இருந்த செய்தியானது 2021/01/11 ஆம் திகதி அன்று ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரத்தில் மனித உரிமை ஆணைக் குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது
தகவல்
GGI Jabeen Mohammad
$ads={2}
தற்போது கட்டாய ஜனாஸா எரியூட்டல் வாரத்தில் சுகாதார பிரிவினால் எடுக்கப் பட்டுள்ள தீர்மானங்கள் விஞ்ஞான ரீதியாக எடுக்கப் பட்டவை என்ற தகவல் கிடைக்க பெற்ற காரணங்களை முன்வைத்தும், மேலும் தற்போது சுகாதார பிரிவினால் அரசாங்கத்திற்கு தீர்மானம் எடுக்க முடியும் என்ற விடயத்தை வெளியிட்டுள்ள நிலையில் அரசாங்கம் இதற்கான இறுதித் தீர்வை சுற்றுநிருபம் மூலம் வெளியிட வேண்டிய கட்டாயத்தை நெருங்கியுள்ள சந்தர்ப்பத்தை உணர்ந்தாலும் மேலே குறிப்பிடப் பட்ட தகவல்களை உறுதி செய்து கொண்ட காரணத் தினாலும் 2021/01/11 ஆம் திகதி ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்த இருந்த மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் ஒன்றியத்தின் தலைவர் ஹனீப் முஹம்மத் அவர்களும் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர்கள் சார்பாக பவ்சுல் அமீர் மற்றும் முஹம்மது பிர்தௌஸ் மூவரும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர் என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
மேலும் அரசாங்கம் ஜனாஸா விவகாரத்தில் உறுதியான ஒரு தீர்ப்பை நாட்டு மக்களுக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையினால் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற சிந்தனையில் இந்த ஆர்ப்பாட்டத்தை பிற்போடப்பட்டதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தகவல்
GGI Jabeen Mohammad