யாழ்.பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார்.
கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், ஒரு பொது விதி உள்ளது. அது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பல்கலைக்கழக வளாகத்திலும் எந்தவொரு நினைவுச் சின்னத்தை அல்லது சிலையை அமைக்க முடியாதென அது கூறுகிறது.
$ads={2}
யாழ். பல்கலைக்கழகத்திலிருந்த நினைவுத்தூபி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி கட்டப்பட்ட ஒன்றாகும் என்பதால் அதை அகற்ற வேண்டியிருந்ததாக அமைச்சர் கூறினார்.
இந்த நினைவுத்தூபி ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்பதால் அது குறித்து வாதிடுவதில் எந்தப் பயனுமில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.