கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்து ஆராய்வதற்காக எந்த குழுவையும் நியமிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதா அடக்கம் செய்வதா என்பதை ஆராய்வதற்கான தான் குழுவொன்றை நியமித்துள்ளதாக ஊடகங்களிலும் சமூக ஊடங்களிலும் போலியான தகவல்கள் வெளியாகியுள்ளன என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
$ads={2}
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கொரோனாவினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எப்போதும் விஞ்ஞான ரீதியிலானவையாக காணப்பட வேண்டும்; மத, இன, அரசியல், சமூக மற்றும் புராண அடிப்படையில் இதற்கான தீர்வை காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் புதிய நோய் என்பதால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆரம்ப கட்ட பரிந்துரைகள் மாற்றமடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.