யாழ். கொழும்புத்துறை பகுதியில் பிறந்த சிசு ஒன்றை குழிதோண்டி புதைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ். நீதவான் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, சந்தேக நபர்களான இரண்டு பெண்களும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
$ads={2}
விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சிசுவின் தாய் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை, கணக்கர்கடை சந்தி பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பிறந்த சிசு புதைக்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரே குழந்தையை பிரசவித்துள்ளார்.
பிரசவத்தின் பின்னர் ஏற்பட்ட அதிக குருதிப்போக்கு காரணமாக குறித்த தாய் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைக்கொண்டு குழந்தை பிறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி, திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸார் இணைந்து சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.