வாட்ஸாப் செயலியின் தனியுரிமைக் கொள்கையின் (Privacy Policy) புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், அதன் பயனர்களின் செயல்பாடுகளை வாட்ஸாப் செயலியின் மூலம் கண்காணிக்கவும், அந்தத் தரவை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தவும் பேஸ்புக்கினை அனுமதிக்கும் என்று இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம் (ITSSL) தெரிவித்துள்ளது.
$ads={2}
வாட்ஸாப்பின் புதிய தனியுரிமை கொள்கை, வாட்ஸாப் சேவை மற்றும் தரவுகளை கையாளும் விதம், வாட்ஸாப் சேவையை பயன்படுத்தும் வர்த்தகங்கள் பேஸ்புக் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவது மற்றும் பயனாளிகளின் உரையாடல்களை கையாள்வது மற்றும் பேஸ்புக் சார்ந்த சேவைகளுடம் இணைந்து செயல்படும் விதம் ஆகிய 3 முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் வாட்ஸாப் பயன்பாட்டின் சேவை விதிமுறைகள் பெப்ரவரி 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸாப் நிறுவனம் பயன்பாட்டின் அறிவிப்பு மூலம் பயனர்களுக்குத் தெரிவித்துள்ளது.
"எனவே, பெப்ரவரி 08 முதல் வாட்ஸாப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த, பயனர்கள் புதிய விதிமுறைகள் மற்றும் புதிய தனிப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் அதை ஏற்க விரும்பாத பயனர்கள், பெப்ரவரி 08 முதல் வாட்ஸாப் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இழப்பார்கள் ”எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.