
சவூதி மற்றும் கத்தார் இடையே தரை மற்றும் வான்வழி போக்குவரத்து மீண்டும் திறக்கப்படவுள்ளதாக குவைத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் நாசர் அல்-சபா திங்களன்று தெரிவித்தார்.
சவூதி மற்றும் கத்தார் எல்லைகளை திறக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக குவைத் அமைச்சர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஜூன் இல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் - கத்தார் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் ஈரானுடன் மிக நெருக்கமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை துண்டித்து விட்டதாகவும் அறிவித்திருந்தது.
மேலும் அவர்கள் கட்டார் மீது நிலம், கடல் மற்றும் விமான மார்க்க தடைகளையும் விதித்தனர்.
எனினும், கத்தார் பலமுறை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது.
இந்நிலையில், கத்தார் மற்றும் நான்கு அரபு நாடுகளுக்கு இடையே குவைத் மத்தியஸ்தம் செய்து வந்து கொண்டு இருக்கிறது.