
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்குத் திருப்பியழைத்து வருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று (19) முற்போக்கு பெண்கள் ஒன்றியத்தினால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முற்போக்கு பெண்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 'நாட்டின் பாரத்தைச் சுமக்கும் புலம்பெயர் பணியாளர்களைக் கைவிடாதிருப்போம்', 'வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் சுரண்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
-நா.தனுஜா


