கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், பிரைட் ரைஸ் போன்ற உணவுகளை முடிந்தளவு தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நுண்ணுயிர்கள் தொடர்பிலான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்றைய தினம் (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பல் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
சமனிலையான உணவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், போதியளவு உறக்கம் மற்றும் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விட்டமின் டி குறைப்பாடு இருந்தால் அது குறித்து கவனம் செலுத்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வாரமும், அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை நாட்டில் கொரோனா வைரஸ் வகைகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டுமெனவும், சில வேளைகளில் இலங்கையிலேயே இந்த வைரஸ் வகையில் மாற்றடைந்த புதிய வைரஸ் வகையொன்று உருவாவதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.