
இலங்கைக்கு வந்த உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை அரசாங்கம் பரிந்துரைத்த சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் எதிர்காலத்தில் இவை சரி செய்யப்படும் என்று பொது சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமது சுகாதார அமைச்சு சுற்றுலா அமைச்சகத்துடன் சேர்ந்து சரிசெய்ய வேண்டிய காரணிகளை அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கொரோனா சிகிச்சைக்கான 11,880 கடடில்களில் 8,096 ஏற்கனவே நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளன.
2,560 கட்டில்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் பொது சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.