முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மூதாதையர் இல்லமான நிட்டம்புவவில் அமைந்துள்ள கொரகொல்ல பங்களாவிற்குள் திருடன் புகுந்து தப்பிச் சென்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திருடன் புகுந்த சம்பவம் தொடர்பில் சந்திரிக்கா கடந்த 20 ஆம் திகதி காலை முறைப்பாடு அளித்துள்ளார்.
திருடன் புகுந்த நேரம் ஓய்வு பெற்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸார் கடமையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரண்மனையின் பின்பக்க கதவு வழியாக நுழைந்த திருடன் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டை கல்லால் உடைத்த பின்னர் கதவை திறந்து அரண்மனைக்குள் பிரவேசித்துள்ளான்.
அரண்மனைக்குள் மில்லியன் கணக்கான சொத்துக்கள் இருந்த போதிலும் மூன்று மதுபான (விஸ்கி) போத்தல்களை மாத்திரமே திருடன் எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
அரண்மனையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எந்தவொரு மதிப்புமிக்க பொருட்களையும் எடுத்துக் கொள்ளாமல் மூன்று போத்தல்கள் விஸ்கியை மட்டுமே எடுத்து சென்றுள்ளதால் போதைக்கு அடிமையான ஒருவரே இந்த திருட்டை செய்திருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
மூலம் - ஐ.பி.சி