தனது மாமியாரை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் கம்பளையை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை - வல்லஹகொட எனும் பகுதியில் அமைந்துள்ள ஓர் முன்னணி பாடசாலையின் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் வயதான பெண்ணொருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களின் வைரலானதை அடுத்து, குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
$ads={2}
இது தொடர்பாக கம்பளை பொலிஸாருக்கும் ஏற்கனவே பல புகார்கள் கிடைக்கப்பெற்றதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
குறித்த அந்த வீடியோவில், ஆசிரியர் தனது மாமியாரை கத்தியால் தாக்க முற்பட்டதையும், பின்னர் அந்த பெண் தள்ளிவிடப்பட்டு தரையில் விழுந்ததையும் காட்டுகிறது.
$ads={2}
மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் தனது மருமகள் தன்னை பலமுறை தாக்கியது தொடர்பாக பொலிஸில் பல புகார்களை அளித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பொலிஸார் சந்தேக நபரை பல சந்தர்ப்பங்களில் எச்சரித்து அவரை விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
UPDATE:
கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியயை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் லலித் வீரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபரை நீதிவான் கடுமையாக எச்சரித்து 5,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
கம்பளை - சிங்ஹாப்பிட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான மேற்படி பட்டதாரி ஆசிரியை மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த பெண் கம்பளை நகரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் சந்தேக நபர் தனது மாமியார் தன்னிடம் அனுமதி கோராமல் இடியப்பம் சாப்பிட சொதி ஊற்றிக் கொண்டமையால் சினமடைந்து அவரின் கைகளாலும் கத்தி ஒன்றினாலும் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதனை ஆசிரியையின் 10 மற்றும் 9 வயதுகளுடைய அவரின் இரு பிள்ளைகளும் தாய்க்குத் தெரியாமல் கைத்தொலைபேசியில் வீடியோ செய்துள்ளனர்.
பின்னர், குறித்த வீடியோவானது இரு தினங்களுக்கு முன்னர் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் மகளிடம் சிக்கியதனையடுத்து அதனை அவர் சமூக வலைத்தலத்தில் பதிவேற்றியுள்ளார்.
A teacher was arrested yesterday for brutally beating her mother-in-law. pic.twitter.com/OzYYgxGCDT
— DailyMirror (@Dailymirror_SL) January 11, 2021