அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சிறு பிள்ளைகள் ஐவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், வீட்டையும் தீக்கிரையாக்கிய பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
25 வயதான ஓரியானா மையர்ஸ் எனும் இப்பெண் தனது 04 பிள்ளைகளை ‘ஷொட் கன்‘ ரக துப்பாக்கி மூலம் சுட்டுக் கொன்றுள்ளார். வேர்ஜீனியா மாநிலத்தின் வில்லயம்ஸ்பேர்க் நகரில் கடந்த மாதம் 08ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்பிள்ளைகளின் மூவர் அவரின் சொந்தப் பிள்ளைகளாவர். ஏனைய இருவரும், அவரின் கணவரின் முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த பிள்ளைகளாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷோன் டோசன் பம்கார்னர் (07), றைலி ஜேம்ஸ் பம்கார்னர் (06), கியன் மையர்ஸ் (04), அரிகிலே நோவா மையர்ஸ் (03), ஹைகன், ஜிராசசி மையர்ஸ் (01) ஆகிய 04 பிள்ளைகளே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்றபோது ஓரியனானாவின் அவரது கணவர் பிறையன் பம்கார்னர் வீட்டில் இருக்கவில்லை. அவர்களின் குடும்பத்துக்குச் சொந்தமான வாகனம் விபத்தொன்றில் சிக்கியதால், போக்குவரத்து பிரச்சினையை சமாளிப்பதற்காக தனது உறவினரின் வீட்டில் பிறையன் பம்கார்னர் வீட்டில் சுமார் ஒருவாரம் தங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஓரியானா மையர்ஸ் எழுதிய பல குறிப்புகள் சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. தான் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் ஓரியானா எழுதியிருந்தார்.
மூலம் - மெட்ரோ