மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான தனது அறிக்கையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் பயணத்தடை விதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கை அரசாங்கத்திடமுள்ளது பதிலளிப்பதற்கு 27 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.