தரம் ஆறுக்கு மேற்பட்ட பன்னிரண்டு இலட்சம் மாணவிகள் மாதாந்த மாதவிடாய் காலப்பகுதியில் இரு நாட்கள் பாடசாலை வருவதைத் தவிர்த்துள்ளதாக கல்வி அமைச்சு நடாத்திய மதிப்பீட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியந்துள்ளது.
$ads={2}
நகர மற்றும் கிராம பிரதேச அரச பாடசாலைகளில் பயிலும் 65 வீதமான மாணவிகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதனால் அவர்களுக்கு மாதவிடாய் துவாய் பயன்படுத்த முடியாது நிலையுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன் காரணமாக மாணவிகளின் உள மற்றும் சுகாதார நிலைமைகளை ஆரோக்கியமாகப் பேணிக் கொள்ளுவதற்கு உதவும் வகையில் அரசாங்கம் இலவசமாக மாதவிடாய் சுகாதாரத் துவாய்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இணைந்து நாளை இது தொடர்பாக அமைச்சரவைக்கு விளக்கமளித்து இத்திட்டத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் முன்கொண்டு செல்வதற்கான செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
மூலம் - teachmore.lk