
சுவர்ணமஹால் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில்,
குற்றப் புலனாய்வு பிரிவினர் சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளது.
$ads={2}
அங்கீகரிக்கப்படாத நிதி வணிகத்தை நடத்திய குற்றச்சாட்டில் சுவர்ணமஹால் ஜுவல்லர்ஸ் லிமிடெட் முன்னாள் பணிப்பாளர்களை கைது செய்ய சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் உத்தரவிட்டார்.
இதேவேளை, 13.7 பில்லியன் ரூபா பெறுமதியான வைப்புகளை சட்ட விரோதமாக ஏற்றுக் கொண்டமை, முறைகேடு மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நிறுவன முன்னாள் பணிப்பாளர்கள் மீது குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னால் நிர்வாக இயக்குனர் ஜீவக எதிரிசிங்கவும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.