
வெளிநாடுகளின் இருந்து தற்போது நாட்டுக்கு திருப்பி அழைத்துவரப்படும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அரசாங்கத்தால் இலவசமாக ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அனுமதிக்க வேண்டும், அல்லது அவர்களின் சொந்த வீடுகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அரசுக்கு பரிந்துரை விடுத்துள்ளார்.
இலங்கை புலம்பெயர்ந்த தொழிளார்கள் அங்கு வேலை இழந்து, மீதமுள்ள சேமிப்புகளுடன் நாட்டிற்கு திரும்பும் நிலையில் அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
$ads={2}
நேற்று (05) நடைபெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தின் போது அமைச்சர் இந்த முன்மொழிவை முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட ஹோட்டல்களில் ஏன் இதுவரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பது குறித்து தீவிர விவாதம் ஒன்றும் இடம்பெற்றது.
இந்நிலையில், புலம் பெயர்ந்த இலங்கை தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை விகிதத்தில் விமான டிக்கெட்டுக்களை வழங்க வேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இராஜாங்க அமைச்சர் அருண்திக பெர்னாண்டோ, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் திருப்பி நாட்டுக்குள் அழைத்துவரப்படும் செலவுகளை ஏற்கனவே செய்துள்ளதால், அவர்களின் வீடுகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் செயல்முறைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.
-எம்.எம் அஹ்மத்