
நேற்றைய (19) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இவ்வாறான எந்தவொரு தீர்மானமும் விமான நிலையம் அல்லது விமான சேவைகள் நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படவில்லை என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் வழிநடத்தல் பணிப்பாளர் சேஹான் சுமனசேகர எமது செய்தி பிரிவிற்கு உறுதிப்படுத்தினார்.
கொரொனா தடுப்பதாக கூறப்படும் கேகாலை தம்மிக்க பண்டாரவால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பாணி தொடர்பிலான ஆய்வு கூட பரிசோதனை ஆரம்பித்து நேற்றுடன் 10 நாட்கள் நிறைவடைகின்றன.
எனினும் அந்த பாணியை அருந்தியவர்களுக்கு கொரொனா தொற்றுறுதியாகியுள்ளமை தொடர்பில் ஹிரு செய்தி சேவை, சுதேச சிகிச்சை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகரவிடம் வினவியது.
இதற்கு பதில் வழங்கிய அவர், ஆய்வு கூட பரிசோதனையில் உறுதிப்படுத்துவதற்கு முன்னர் குறித்த பாணியை கொரோனா தடுப்பு ஒளடதமாக பயன்படுத்த முடியும் என தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம் - ஜப்னா முஸ்லிம்