போதைப்பொருள் அருந்துவது போல் பெட்ரோல் அருந்தி அதனால் ஏற்படும் போதைக்கு அடிமையாகியிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுரங்குளி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
$ads={2}
குறித்த நபர் பெட்ரோல் அருந்துவதனால் கிடைக்கும் போதைக்கு அடிமையாக இருப்பவர் என கூறப்பட்டுள்ளது.
இவருக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கான ஆலோசனைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டிருந்தாலும், குறித்த போதைக்கு அவர் அடிமையாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இவரது மனநிலை சமநிலையை இழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, அவரது மரணத்துக்கும் காரணமாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.