கடந்த மூன்று நாட்களில் ஏழு மாவட்டங்களில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என்று தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, பதுள்ளை, யாழ்ப்பாணம், கேகாலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு மூன்று நாட்களில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை என மையம் தெரிவித்துள்ளது. மேலும் மட்டக்களப்பு, மன்னார் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து நேற்று தலா ஒரு கொரோனா தொற்றாளர் பதிவாகியுள்ளதாக மையம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் நேற்று பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 96 ஆகும். அதன்படி கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து 21 பேரும், அலவத்துகொடை பகுதியிலிருந்து 20 பேரும், கம்பளை பகுதியிலிருந்து 10 பேரும் இனங்காணப்பட்டனர்.
இருப்பினும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து நேற்று 47 தொற்றாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக கோவிட் 19 பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது. கல்கிஸ்ஸை பிரதேசத்திலேயே அதிக எண்ணிக்கையிலான 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாரஹன்பிட்ட பகுதியில் இருந்து 10 பேரும், பொரளை பகுதியிலிருந்து 7 பேரும், நுகேகொடை பகுதியிலிருந்து 6 பேரும் நேற்று பதிவாகியுள்ளனர்.
$ads={1}

$ads={2}

இதற்கிடையில், பொலன்னறுவையில் 43 தொற்றாளர்களும், குருநாகலை மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த 33 தொற்றாளர்களும் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 31 தொற்றாளர்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 22 தொற்றாளர்களும் ல், களுத்தரை மாவட்டத்தில் இருந்து 12 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய 31 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார்.