சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்துக்கும் உலகளவில் நல்ல வரவேற்பு இருந்ததாகவே பார்க்கப்படுகிறது. அந்தப் படம் முதல் நாளில் சுமார் 7 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால், இந்த வசூல் வேட்டை பொங்கலுக்கு ரிலீஸான இரண்டு படங்களுக்கும் தொடரும். அதே நேரத்தில் பொங்கலுக்கு இந்த இரண்டு திரைப்படங்களை விட கலெக்ஷனில் அடித்துத் தூக்கியது டாஸ்மாக் வசூல்தான்.
போகிப் பொங்கல் மற்றும் பெரும் பொங்கல் ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சுமார் 420 கோடி ரூபாய் சரக்கு விற்பனை நடந்துள்ளதாம். அடுத்து வரும் நாட்களில் இந்த வசூல் சாதனையை முறியடிக்கவும் டாஸ்மாக் இலக்கு வைத்துள்ளதாம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, மக்களுக்கு 2,500 ரூபாய் பரிசுத் தொகுப்பு கொடுத்தது. அந்த பரிசுத் தொகுப்பு எப்படியும் டாஸ்மாக் வழியாக மீண்டும் அரசாங்கத்துக்கே போகும் என்று கூறப்பட்டது. இது குறித்து மாநில வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனவாசன் கூட வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் பொங்கல் டாஸ்மாக் வசூல், வெளியான அத்தனைப் படங்களின் கலெக்ஷனையும் முறியடித்து, கொடிகட்டிப் பறந்து வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானது. ரிலீஸான முதல் நாளே மாஸ்டர், 53 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. இரண்டாவது நாளான நேற்று, தமிழகத்தில் மட்டும் சுமார் 16 கோடி ரூபாய் வசூலை மாஸ்டர் கலெக்ட் செய்தது.
சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்துக்கும் உலகளவில் நல்ல வரவேற்பு இருந்ததாகவே பார்க்கப்படுகிறது. அந்தப் படம் முதல் நாளில் சுமார் 7 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால், இந்த வசூல் வேட்டை பொங்கலுக்கு ரிலீஸான இரண்டு படங்களுக்கும் தொடரும். அதே நேரத்தில் பொங்கலுக்கு இந்த இரண்டு திரைப்படங்களை விட கலெக்ஷனில் அடித்துத் தூக்கியது டாஸ்மாக் வசூல்தான்.
போகிப் பொங்கல் மற்றும் பெரும் பொங்கல் ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சுமார் 420 கோடி ரூபாய் சரக்கு விற்பனை நடந்துள்ளதாம். அடுத்து வரும் நாட்களில் இந்த வசூல் சாதனையை முறியடிக்கவும் டாஸ்மாக் இலக்கு வைத்துள்ளதாம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, மக்களுக்கு 2,500 ரூபாய் பரிசுத் தொகுப்பு கொடுத்தது. அந்த பரிசுத் தொகுப்பு எப்படியும் டாஸ்மாக் வழியாக மீண்டும் அரசாங்கத்துக்கே போகும் என்று கூறப்பட்டது. இது குறித்து மாநில வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனவாசன் கூட வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் பொங்கல் டாஸ்மாக் வசூல், வெளியான அத்தனைப் படங்களின் கலெக்ஷனையும் முறியடித்து, கொடிகட்டிப் பறந்து வருகிறது.
மூலம் - இந்திய ஊடகம்