
வவுனியா நகரினை முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
இந்நிலையில், வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளை நாளை (13) முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 42 பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியாவில் 2 ஆயிரம் பேருக்கு முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வரும் வரை குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்று முறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்து அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செட்டிகுளம் மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 2 பாடசாலைகளினதும் கல்வி செயற்பாடுகளை வருகை தரும் ஆசிரியர்களை கொண்டு நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.